என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தரிசு நிலம்"
- விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது.
- தரிசு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பு உருவாகும்.
திருப்பூர்
தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில் உழவன் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம், தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்து விவசாயிகளே பதிவு செய்ய முடியும். வீட்டு மனைகள் இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறி வரும் பருவநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல விளை நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.காலப்போக்கில் இவை வீட்டு மனைகளாக மாறும் அபாயம் உள்ளது.
இந்தநிலையில் விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது.அதன் ஒருபகுதியாக தரிசு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேளாண்மைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தரிசு நிலங்களைக் கணக்கெடுக்கின்றனர்.மேலும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தரிசு நிலங்களை, தரிசு நில மேம்பாட்டுத்திட்டம், தொகுப்பு தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் விளை நிலங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கிராமங்கள் தோறும் சென்று தரிசு நிலங்களைக் கண்டறிவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இதனால் சில நிலங்கள் விடுபட்டு விடுவதால் தரிசு நிலங்களை முழுமையாக கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தற்போது தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்த விபரங்களை உழவன் செயலி மூலம் விவசாயிகளே நேரடியாக பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தரிசு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பு உருவாகும்.
எனவே உழவன் செயலி மூலம் தரிசு நிலம் குறித்த விபரங்களை பதிவு செய்து அதனை விளை நிலமாக மாற்றும் அரசின் முயற்சியில் இணைந்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறினர்.
- நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
- நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
குடிமங்கலம் :
குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-
விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.
குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.
- சிறுகுடி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களை பார்வையிட்டார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகாவில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளில் தரிசுநிலங்களில் உள்ள காட்டு கருவேல் முள்செடிகளை அகற்றி சாகுபடிக்கு தயார்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் சேக் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் சிறுவிவசாயிகளை இணைத்து 15 ஏக்கர் தரிசு நிலங்களை இணைத்து சங்கம் அமைத்து, முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு ஏற்றவாறு மாற்றி சிறுதானியங்கள் உற்பத்திக்கு தயார்படுத்த வேண்டும். மானியத்தில் ஆழ்குழாய்கிணறு அமைத்து சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை துணை இயக்குநர் சேக் அப்துல்லா ஆய்வு செய்தார். 2022 சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களை பயிரிட்டு அரசு மானியங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார்.
சிறுகுடி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களை பார்வையிட்டார். தற்போது மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி சாகுபடி நிலங்களாக மாற்றி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்